Assign modules on offcanvas module position to make them visible in the sidebar.

Dream to live clean?

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt.

சர்வதேச அரங்கில்  உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியிலும் பொலிவுடன் தனித்தன்மையோடு நிமிர்ந்து நின்ற நாடுகளில் ஓமான் நாடும் ஒன்று. பல்வேறு சிறப்புகளுக்கும் தொன்மைக்கும் பெயர்பெற்ற ஒமான் நாட்டில் நம் பாரத காலாச்சாரமும் இந்நாட்டின் காலாச்சரத்தோடு இழையோடிப்போயிருப்பதை காணமுடிகிறது. தொடக்க காலங்களில் தமிழ் கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த நேரம், சிறு அறையில்   ஜெபவழிபாடுகளாக ஆரம்பிக்க பட்ட பக்தி முயற்சிகளின் பலனாக அருட்தந்தை. பர்த்தலோமியோ அவர்களால் அவர்களின் காலத்தில் ரூவி ஆலய பணிகள் வெகுவாக முடுக்கி விடப்பட்டன.  புனித பாப்பரசரின் அன்றைய இந்திய தூதுவர் நம் மண்ணின் மைந்தர் மேதகு கர்தினால் டாக்டர். சைமன் லூர்து சாமி அவர்களால் 04-11-1977 புதுப்பொலிவுடன் ரூவி புனிதர்கள். இராயப்பர் சின்னப்பர் ஆலயம் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப் பட்டது. 33 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1978-ல் மாதமொருமுறை ஆறு பேரால் ஜெபமாலை மட்டுமே  தமிழில் சொல்லப்பட்டு வந்த காலத்திலிருந்து, இன்று இந்திய சமூகங்களின் கூட்டமைப்பில்  ஒமான் தமிழ் கத்தோலிக்கச் சங்கம் தனித்தன்மையோடு உயர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையாகாது. தூய ஆவியானவரின் காலா ஆலயம் 1987-ஆம் ஆண்டு அருட்தந்தை.பர்ணபாஸ் அவர்களின் சீரிய முயற்சியால் கட்டப்பட்டது. 1990-ஆம் ஆண்டில் சலாலா பங்கு குருவானவராக இருந்த அருட்தந்தை. ராயன் அவர்களால் ஓரிருமுறை தமிழில் திருப்பலி ரூவி ஆலயத்தில் நிறைவேற்றப்பட்டது. 1994- ஆம் ஆண்டு முதல் மாதமொருமுறை தமிழ் குருவானவரான அருட்தந்தை. பிளோபர்ட் அவர்களால் ரூவி ஆலயத்தில் வைத்து தமிழில் திருப்பலி  ஒப்பு கொடுக்கப்பட்டது. 1995 - ஆம் ஆண்டில் ஆன்மீக குருவாக பொறுப்பேற்ற அருட்தந்தை. மரிய அந்தோனி அவர்களால் மாதத்தின் முதல் வியாழக்கிழமை ரூவி ஆலயத்திலும், மூன்றாவது வியாழக்கிழமை காலா ஆலயத்திலும் அனைவரும் பங்கு பெறும் வண்ணம் இரவு 08:30 மணிக்கு இன்றும் தமிழ் திருப்பலிகள் நடைபெறுகிறது. 2003 -ம் ஆண்டிலிருந்து அருட்தந்தை. குழந்தை போஸ் உதவி பங்கு குருவானவராக பொறுப்பேற்றகாலம், ஆன்மீக     மறுமலர்ச்சியின் காலம் என்று குறிப்பிடுவது சாலச்சிறந்தது. இக்கால கட்டத்தில்தான் வியத்தகு முன்னேற்றத்தையும் மாறுதல்களையும் தமிழ் கத்தோலிக்கச் சங்கம் பெற்றது. மேற்குறிப்பிட்டவாறு 1978-ம் ஆண்டு சிறு குழுவாக செயல்பட்ட தமிழ் கத்தோலிக்க குழு1994-ஆம் ஆண்டு முதல் ஒமான் தமிழ் கத்தோலிக்கச் சங்கமாக   உருமாறப்பட்டது.

ரூவி கத்தோலிக்க திருச்சபையின் பங்குதளத்திற்கு கீழ்வரும் ஒமான் கத்தோலிக்கச் சங்கம், சுருக்கமாக OmanTCS  எனவும் அழைக்கலாம்.

தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை இறைவனின் அன்பினில் ஒன்றிணைப்பது, ஆன்மீக வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது OmanTCS-ன் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றாகும்.

loading...
Contact US: OmanTCS
Send us a message: info@omantcs.com
Visit usOman - Ruwi